மயிர் கவிதை !


என் இமைகளின் மேல்
உனக்காகவென்றே
சில மயிர்களை வளர்த்து
வைத்திருக்கிறேன்
அது வளர்த்ததா வளர்ந்ததா?
தெரியாது.
உன்னை எனக்கு பிடிக்க
ஏழாயிரம் காரணம் இருக்கலாம்
ஆனால் உனக்கென
உன்னை அடையாளப் படுத்த
என
ஊர் மக்கள் வைத்திருந்த
ஒரே அடையாளம் உன் மயிர்.
கூந்தல் என்று நாகரீகமாகவோ
ரோமம் என்று
உரோமம் அற்ற ரோமன்களை
சொல்லியோ முடியற்ற ஒரு
இனத்தை மயிருக்கு
அடையாளம் ஆக்கினார்கள்.
அது ரோமமோ உரோமமோ
முடியோ?
அதுவல்ல சிக்கல்,
மும்முடிச் சோழன் மிக
நீண்ட மயிர் கொண்டவனோ என்னமோ?
எது எப்படி போனாலும்,
மிக நீண்ட
மயிர்களால் ஆன என்னவளுக்கு
வேறென்ன என்னால்
செய்துவிட முடியும்
இந்த கவிதையைத் தவிற?