கவிதைகளை கருவேற்றம் செய்கிறேன்

கொஞ்சம் கொஞ்சமாய்
கொஞ்சிக் கொஞ்சியாய்
என்
கவிதைகளை
கருவேற்றம் செய்கிறேன் 
அவன் அவள் அது
என்ற மூன்றில் 
இருந்தும் மீள
முடியாத ஒரு காலம் இது,
என் கவிதைகளை
ரசிப்பவர்கள் யாரும்
என் முகவரிகளை
தேடுவதில்லை.
காரணம்......
இது கவிதையாய் இல்லாததால்
கூட இருக்கலாம்

#சாவுங்கடா

#சாவுங்கடா!

மோதிக்கொள்ளப் போகும் 
இரண்டு கேஸ் டேங்கர்கள்
மேல் முட்டாமல் இருக்க
புளியமரத்தின் மேல்
மோதியது மூன்று சக்கர
ஆட்டோ....
டேங்கர் லாரிகள் இரண்டும் 
ஒதுங்கிச் செல்ல
முட்டிய ஆட்டோ முழுக்க
ரத்தம்...
டிரைவர் தவிர
எலோரும் மரணம்.
டிரைவர் ஆன் தி வே!!

#சாவுங்கடா


முன்பெல்லாம் அரசாங்கம்
பணம் கொடுத்து
அரிசி, ஹார்லிக்ஸ்
எல்லாம் கொடுத்துதான் 
குடும்பக் கட்டுப்பாடு
செய்துகொண்டிருந்தது 
இப்போதெல்லாம்
குடி மக்களே முன்வந்து
செய்துகொள்கிறார்கள்.
டாஸ்மாக்கில்.

#சாவுங்கடா


மேலிருந்து கீழாகவும்
கீழிருந்து மேலாகவும்
கயிற்றின் முனைகளை
பற்றிக் கொண்டே
கடந்து கொண்டிருக்கிறது
காலம்,
கிடைக்கப் போவது
கழுத்தாகவும் இருக்கலாம்
இப்படி ஏதாவது
மொக்கை
கவிதையாகவும்
இருக்கலாம்.

#சாவுங்கடா

தூக்கு தூக்கி

அவன்
கீழே போய்க்கொண்டிருந்தான்
அவள்
மேலே போய்க்கொண்டிருந்தாள்
லிஃப்ட் இயக்குனர்.
இரண்டு பேரையும்
தன் சிசி மானிட்டரில்
வெறித்துப் பார்த்தபடி
சுவிட்சை ஆஃப்செய்தான்
சாவுங்கடா என்ற
உலகுபுகழ் ஹேஷ் #டேகை
தன் கவிதையின்
கடைசி வரியாய்
எழுதிக் கொண்டே

#சாவுங்கடா

அவன் என் ஜாக்கி ஜட்டி......

அவன்.... அவனை அணியவில்லை என்றால் தான் சுகம். தூக்கியெறிந்து சுதந்திரமாக இருக்கலாம் என்றால்
என்னருகில் இருக்கும் கார்ப்ரேட் கன்னிகள் நலன் பேணி 
அவன் என்னுடன் ஒட்டிக்கொள்கிறான். இரவினில் பாலியியல் வறட்சியால் 
நான் சிந்தும் கண்ணீரை காத்து தனக்குள்
வாங்குபவனும் அவனே.... பலமுறை என் கால்சட்டையின் 
பற்கள் படாமல் காத்தவன் அவன். காதலியின் அவசரத்துக்கு ஈடுகொடுத்து
அவளுக்கு இணையாக ஆடையவிழ்ப்பில் 
தோல்வியடைய காரணமும் அவன். அவன் என் ஜாக்கி ஜட்டி...... __ இலக்கியம் படிக்காதவன்.
https://www.facebook.com/profile.php?id=100007511465255

கோவணங்களால் ஆனது என் வேட்டி


ஒரு காலத்தில்
என் பாட்டனும் பூட்டனும்
கோவணங்களை வேட்டிகளைக்
கொண்டே தயார் செய்துகொண்டனர்
புதுக் கோவணம் என்ற சொற்ப் பதமே
அப்போது இருந்திருக்காது
இப்போது போல
அப்போது ஜாக்கியோ
கால்வினோ இல்லை
இருந்ததெல்லாம் பழைய நைந்து போன
வேட்டி மட்டுமே
அதுவும் அந்த வேட்டி இனிமேல்
கோவனத்துக்கு மட்டுமே
ஆகும் என்ற காலமான
காலம்
இப்போது லுங்கியும்
வேட்டியும் அணிபவனைக்
கண்டால் ஏளனமாய் பார்க்கும்
எல்லோரின் முன்னோர்களும்
ஒரு காலத்தில் அந்த கிழிந்த வேட்டியையே
கோவனமாக
அணிந்த உண்மையை நாம்
உரக்கச் சொல்வோம்.


புவியீர்ப்பு என்னும் ஏகாதிபத்திய சக்தி

பிரபஞ்சப் பெருவெளியில் 
விளைந்திருக்கும் 
நட்சத்திரப் பயிர்களை 
உய்விக்க எண்ணியே 
உமிழ்ந்து விடுகிறேன் 
மல்லாக்கப்படுத்துக்கொண்டு 

எனது ஜீவ எச்சிலை 
அங்கே எடுத்துச் செல்லாத 
புவியீர்ப்பு என்னும் 
ஏகாதிபத்திய சக்தியை சாடுங்கள் .

என் எச்சில்பட்டு 
போதியாய் பூமி நோக்கி 
வளர எண்ணிய 
நட்சத்திரப் நாற்றுகளின் 
நல்லக்கனவை நாசமாக்கியது ஏன் என்று ..!!


....உமா மகேஸ்வரன் லாஓட்சு

வன்புணரப்பட்ட ஜட்டி

நீர்வழிப் படூஉம் புனைப்போல் 
வாஷிங் மிஷின் வழிப்படும் 
ஜீன்சுக்குள் பின்னிப்பிணைந்த ஜட்டியொன்று 

எழுப்பிய கூக்ககுரல் 
detergent பிரளயத்தில் சன்னமாய் அழிந்திருக்கும் 

எங்கோ ஓர் மூலையில் 
இன்னும் ஈரமாய் இருக்கும் 
ஒரு பட்டாபட்டி 
கண்ணீருடன் கதறிக்கொண்டிருக்கும் 

தனது பேரப்பிள்ளையான 
90 cm ஜட்டி 
whirlpool machineனால் வன்புணர்வுக்கு ஆளான 
வக்கிர நிகழ்வையெண்ணி ..

துவைத்துக் கிழித்தவர்..
உமா மகேஸ்வரன் லாஓட்சு