கவிதை என்ற
பெயரில்
நீ கிறுக்குவதைப்
படித்து படித்து
குறுதி கொப்பளிக்கிறது
என் பேனா.
கிறுக்குத் தனங்களின்
உச்சமாக உன் வார்த்தையின்
எச்சம்
சிலைகளில் படிந்த
காக்கையின் எச்சம்
போல் வீச்சம் அடிக்கிறது.
எப்பொழுது நிறுத்துவாய்
இந்த கிறுக்குத்தனங்களை ?
உன்னை திருத்த என்னால்
முடியாது என்பதால்
உன் கவிஜைகளை படித்து
என் மனநோய் முற்றுவதற்குள்
என்னை தொலைத்துக்
கொள்கிறேன்.
என்றாவது ஒரு நாள்
நீ எழுதுவதை
நிறுத்திவிட்டு
என்னைத் தேடு !
இப்பொழுதுதான் தெரிகிறது
உன்னைப்பார்த்த பலரும்
ஏன் தள்ளி தலைதெறிக்க
ஓடுகிறார்கள் என்ற
உண்மை !
மதியம் ஞாயிறு, ஜூலை 22, 2007
எப்பொழுது நிறுத்தப் போகிறாய் ?
Labels: கொலைவெறி
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
அது!
அவிங்க தொல்ல தாங்கலைப்பா!
சரி எனக்காவது ஒன்னு எழுதிகுடுங்கய்யா நானும் போட்டு தொலைக்கிறேன்ன்னு சொன்னா அதுவம் தர்ரதில்ல!
அபி அப்பா,
கொலைவெறிக் கவுஜைகள் -
தலைப்பை கேட்டாலே நடுங்குதுல்ல....
:))))))))
யோவ் தனியா இருக்க பயமா இருக்கு யாராவது வாங்கப்பா!
ஆமா கண்ணன்! இதுல மகி ஒருநாள் என்னய கூட இழுத்து வுட்டுட்டாரு! தப்பிச்சு வர்ரதுகுள்ள போதும் போதுன்னு ஆகி போச்சு!
அமுக/குமுக யாருமே இல்லியா! இந்த சூப்பர் பதிவுக்கு வந்து ஆதரவு தாங்கப்பா!
என்னை நானே தொலைத்து கொள்கிறென் அபாரம்
Post a Comment