மதியம் ஞாயிறு, ஜூலை 29, 2007

என் ஞாபகப் பெருவெளியில்


குட்டையாய் இருந்த

சில குடைக்காளான்கள்

அடியில்

அட்டை போல் ஒட்டிக் கொண்டு

அதன் குருதி உறிஞ்சும் கோரப்

பற்களில் வடியும் ரத்த

நாளங்களின்

வன்ம வெடிப்பில்

காத்திருத்தலின்

கடைசி வினாடிகளை

புழுநெளியும் பச்சை

புல் வெளிகளின்

உள்ளே எனக்கானது எனச்

சொல்லும் ஏதாவது ஒரு

விஷமக் கணங்களை

அசைபோட்டபடி எல்லா

இரவுகளுக்கு உள்ளேயும்

ஒளிந்துகொண்டு

வன்மப்

பிரச்சாரம் செய்யும்

உனக்காகவும் இருக்கிறது

என் ஞாபகப் பெருவெளியில்

ஒரு சிறு இடம்.