அரோகரா....

பனிரெண்டாவது பியில்
ஏறி புரட்சி வரப்போகிறது
என்றும் அது
தனக்கு ஏற்கனவேயுள்ள
தடைகளை தகர்த்து
வெகு வேகமாய் முன்னேற்றம்
கண்டுகொண்டிருக்கிறது என்றும்
சாலையோர பூங்காவில்
எப்போதோ சந்தித்து
விடைபெறாமல்
போன நண்பர்
குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
புரட்சி ஒன்றும் சொல்லிவிட்டு
வருவதற்கு அத்தை மகளோ
மாமன் மகளோ
இல்லை அடுத்த வீட்டு
சூப்பர் ஃபிகரோ இல்லையே
தோழர் என்ற என் கேள்வியை
நண்பர் வாங்கித் தரப்போகும்
ஒற்றை தேநீர், வடை நிமித்தம்
பொறுத்துக்கொள்ள வேண்டிய
அளவில்,
என் எப்போதும் முன் உள்ள
தந்திரமாக ஒளிந்து தப்பித்தல் வித்தைகளை பயன்படுத்தி
சமாளித்துவிட்டேன்.
நண்பர் ஒன்றும் அப்படி
வடை சாப்பிடும் ஆள்
இல்லைதான் .
எனக்கு முன் ஏகப்பட்ட வேலைகள்
காத்துக் கிடக்கும் வேளையில்
தமிழ் தேசியம்,
முப்பாட்டன் முருகன்,
திருவிளையாடல்
படம் பற்றியெல்லாம்
கேட்டுத் தொலைக்க வேண்டி
இருக்குமே.....
ம்ம்ம்ம்ம்ம்
வெற்றிவேல்
வீரவேல்
என்ற வெற்று முழக்கம்
சொல்லி பச்சை ஆடையில்
பவனி வரவேண்டிய காலம்
என்ன ஹிந்து முன்னணிக்கு
மட்டுமே உரித்தானதா
என்ன?
நாளைக்கே நான்
2016ல்
பாயும்போது நீங்களும் சொல்லக்கூடிய ஆள்தான்
காக்க காக்க
வாரணம் ஆயிரம்
ச்சே......
சக்தியை நோக்க சரவண பவணார் ....
அதுவும் இல்லையா?
வெற்றி வேல் வீர வேல்...

மயிர் கவிதை !


என் இமைகளின் மேல்
உனக்காகவென்றே
சில மயிர்களை வளர்த்து
வைத்திருக்கிறேன்
அது வளர்த்ததா வளர்ந்ததா?
தெரியாது.
உன்னை எனக்கு பிடிக்க
ஏழாயிரம் காரணம் இருக்கலாம்
ஆனால் உனக்கென
உன்னை அடையாளப் படுத்த
என
ஊர் மக்கள் வைத்திருந்த
ஒரே அடையாளம் உன் மயிர்.
கூந்தல் என்று நாகரீகமாகவோ
ரோமம் என்று
உரோமம் அற்ற ரோமன்களை
சொல்லியோ முடியற்ற ஒரு
இனத்தை மயிருக்கு
அடையாளம் ஆக்கினார்கள்.
அது ரோமமோ உரோமமோ
முடியோ?
அதுவல்ல சிக்கல்,
மும்முடிச் சோழன் மிக
நீண்ட மயிர் கொண்டவனோ என்னமோ?
எது எப்படி போனாலும்,
மிக நீண்ட
மயிர்களால் ஆன என்னவளுக்கு
வேறென்ன என்னால்
செய்துவிட முடியும்
இந்த கவிதையைத் தவிற?

கவிதைகளை கருவேற்றம் செய்கிறேன்

கொஞ்சம் கொஞ்சமாய்
கொஞ்சிக் கொஞ்சியாய்
என்
கவிதைகளை
கருவேற்றம் செய்கிறேன் 
அவன் அவள் அது
என்ற மூன்றில் 
இருந்தும் மீள
முடியாத ஒரு காலம் இது,
என் கவிதைகளை
ரசிப்பவர்கள் யாரும்
என் முகவரிகளை
தேடுவதில்லை.
காரணம்......
இது கவிதையாய் இல்லாததால்
கூட இருக்கலாம்

#சாவுங்கடா

#சாவுங்கடா!

மோதிக்கொள்ளப் போகும் 
இரண்டு கேஸ் டேங்கர்கள்
மேல் முட்டாமல் இருக்க
புளியமரத்தின் மேல்
மோதியது மூன்று சக்கர
ஆட்டோ....
டேங்கர் லாரிகள் இரண்டும் 
ஒதுங்கிச் செல்ல
முட்டிய ஆட்டோ முழுக்க
ரத்தம்...
டிரைவர் தவிர
எலோரும் மரணம்.
டிரைவர் ஆன் தி வே!!

#சாவுங்கடா


முன்பெல்லாம் அரசாங்கம்
பணம் கொடுத்து
அரிசி, ஹார்லிக்ஸ்
எல்லாம் கொடுத்துதான் 
குடும்பக் கட்டுப்பாடு
செய்துகொண்டிருந்தது 
இப்போதெல்லாம்
குடி மக்களே முன்வந்து
செய்துகொள்கிறார்கள்.
டாஸ்மாக்கில்.

#சாவுங்கடா


மேலிருந்து கீழாகவும்
கீழிருந்து மேலாகவும்
கயிற்றின் முனைகளை
பற்றிக் கொண்டே
கடந்து கொண்டிருக்கிறது
காலம்,
கிடைக்கப் போவது
கழுத்தாகவும் இருக்கலாம்
இப்படி ஏதாவது
மொக்கை
கவிதையாகவும்
இருக்கலாம்.

#சாவுங்கடா

தூக்கு தூக்கி

அவன்
கீழே போய்க்கொண்டிருந்தான்
அவள்
மேலே போய்க்கொண்டிருந்தாள்
லிஃப்ட் இயக்குனர்.
இரண்டு பேரையும்
தன் சிசி மானிட்டரில்
வெறித்துப் பார்த்தபடி
சுவிட்சை ஆஃப்செய்தான்
சாவுங்கடா என்ற
உலகுபுகழ் ஹேஷ் #டேகை
தன் கவிதையின்
கடைசி வரியாய்
எழுதிக் கொண்டே

#சாவுங்கடா

அவன் என் ஜாக்கி ஜட்டி......

அவன்.... அவனை அணியவில்லை என்றால் தான் சுகம். தூக்கியெறிந்து சுதந்திரமாக இருக்கலாம் என்றால்
என்னருகில் இருக்கும் கார்ப்ரேட் கன்னிகள் நலன் பேணி 
அவன் என்னுடன் ஒட்டிக்கொள்கிறான். இரவினில் பாலியியல் வறட்சியால் 
நான் சிந்தும் கண்ணீரை காத்து தனக்குள்
வாங்குபவனும் அவனே.... பலமுறை என் கால்சட்டையின் 
பற்கள் படாமல் காத்தவன் அவன். காதலியின் அவசரத்துக்கு ஈடுகொடுத்து
அவளுக்கு இணையாக ஆடையவிழ்ப்பில் 
தோல்வியடைய காரணமும் அவன். அவன் என் ஜாக்கி ஜட்டி...... __ இலக்கியம் படிக்காதவன்.
https://www.facebook.com/profile.php?id=100007511465255

கோவணங்களால் ஆனது என் வேட்டி


ஒரு காலத்தில்
என் பாட்டனும் பூட்டனும்
கோவணங்களை வேட்டிகளைக்
கொண்டே தயார் செய்துகொண்டனர்
புதுக் கோவணம் என்ற சொற்ப் பதமே
அப்போது இருந்திருக்காது
இப்போது போல
அப்போது ஜாக்கியோ
கால்வினோ இல்லை
இருந்ததெல்லாம் பழைய நைந்து போன
வேட்டி மட்டுமே
அதுவும் அந்த வேட்டி இனிமேல்
கோவனத்துக்கு மட்டுமே
ஆகும் என்ற காலமான
காலம்
இப்போது லுங்கியும்
வேட்டியும் அணிபவனைக்
கண்டால் ஏளனமாய் பார்க்கும்
எல்லோரின் முன்னோர்களும்
ஒரு காலத்தில் அந்த கிழிந்த வேட்டியையே
கோவனமாக
அணிந்த உண்மையை நாம்
உரக்கச் சொல்வோம்.


புவியீர்ப்பு என்னும் ஏகாதிபத்திய சக்தி

பிரபஞ்சப் பெருவெளியில் 
விளைந்திருக்கும் 
நட்சத்திரப் பயிர்களை 
உய்விக்க எண்ணியே 
உமிழ்ந்து விடுகிறேன் 
மல்லாக்கப்படுத்துக்கொண்டு 

எனது ஜீவ எச்சிலை 
அங்கே எடுத்துச் செல்லாத 
புவியீர்ப்பு என்னும் 
ஏகாதிபத்திய சக்தியை சாடுங்கள் .

என் எச்சில்பட்டு 
போதியாய் பூமி நோக்கி 
வளர எண்ணிய 
நட்சத்திரப் நாற்றுகளின் 
நல்லக்கனவை நாசமாக்கியது ஏன் என்று ..!!


....உமா மகேஸ்வரன் லாஓட்சு

வன்புணரப்பட்ட ஜட்டி

நீர்வழிப் படூஉம் புனைப்போல் 
வாஷிங் மிஷின் வழிப்படும் 
ஜீன்சுக்குள் பின்னிப்பிணைந்த ஜட்டியொன்று 

எழுப்பிய கூக்ககுரல் 
detergent பிரளயத்தில் சன்னமாய் அழிந்திருக்கும் 

எங்கோ ஓர் மூலையில் 
இன்னும் ஈரமாய் இருக்கும் 
ஒரு பட்டாபட்டி 
கண்ணீருடன் கதறிக்கொண்டிருக்கும் 

தனது பேரப்பிள்ளையான 
90 cm ஜட்டி 
whirlpool machineனால் வன்புணர்வுக்கு ஆளான 
வக்கிர நிகழ்வையெண்ணி ..

துவைத்துக் கிழித்தவர்..
உமா மகேஸ்வரன் லாஓட்சு

தங்கமணி சிறப்புக் கவிதை !

காஃபிக்கு எப்படி தே(ன்)நீர் சுவை அளிக்க
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது ?

கைப்பக்குவம் தான் சொல்லுவார்கள், உன் 'கால்' பக்குவம்
எனக்கு மட்டும் தான் தெரியும். ஆமாம்,
நீ செல்போனில் அழைத்தால் செல்போனே அதிருது...வைப்ரேசன் !

என்னிடம் உனக்கு இருப்பது தோழமையா ? அன்பா ?
வாங்கும் குட்டுகளில் என்றும் தலைக் குழப்பம் தான்,
அப்பளக் குழவிக்கு விடை தெரிந்திருக்கலாம் !

நான் சொல்வதை நீ காது கொடுத்து கேட்பது
மற்றவர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ
உன்னிடம் இருக்கும் செல்போன் மறுக்காது !

இவ்வளவு புகழ்ச்சியையும் வெறும் புகழ்ச்சியா ?
வியப்படைய ஒன்றும் இல்லையென்றாலும்,
அவதூறு என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறது, எதற்கும்

புடைப்படையும் முன் முன்னச்செரிக்கையாக சொல்லிவிடுகிறேன்
ஏப்ரல் 1 க்கு இதற்கும் மேல் பொய் கூற மூடியா ?

http://kusumbuonly.blogspot.com/2009/02/ar.html

ஜட்டிக் கவுஜைகள்-1


என்றைக்காவது ஒருநாள்
இன்று போலவே
என்னுடையதும் தொலைந்து
போயிருக்கும்
ஜட்டிகளின் வழியே காணக்
கிடைக்கும்,
கனவுலகம் ஒன்று
ஆதாமுக்கும் ஏவாளுக்கும்
ஆப்பிள்
இலைகளையாவது
வைத்திருந்தது
இந்த சாத்தானின் சதிவலை
புரியாமல் ஜட்டி போடுவதும் குட்டி
தேடுவதும் வாழ்கை என்று
அலையும் சிலரை
முட்டிக்கு முட்டி தட்டினால் என்ன?

-மகேந்திரன்.பெ

விட்டில் பூச்சி


வெற்று வானமொன்றை
உற்றுப் பார்த்திருக்கும்
கண்களாய் கவிழ்ந்துகிடக்கும்
குப்பைத் தொட்டியருகில்
குலைக்கத் திராணியற்று
வெற்றுடம்பாய்க் கிடக்கும்
சொறிநாயின் சிந்தனைகள்
என்னவாகவிருக்க
முடியும்
என்று எனக்குள்ளே
கருவியபடி காத்திருத்தலின்
அவசியம் ஏதுமின்றி
பிணியிழந்த சடலமொன்று
கடந்து போன பாதைமீது
வைத்த விழி
வாங்காத வண்ணத்தப்
பூச்சியும், வருகை தராத
அரை டவுசர் மாணவனும்
கும்மியடிக்கக் கிளம்பிவிட
வெற்று வகுப்பரையில்
விட்டத்தை வெறித்துப் பார்த்தே
சிதறிப் போன கண்ணாடித்
துண்டுகளைச் சேகரிக்கும்
விட்டில் பூச்சியொன்று
என் கட்டிலருகே
விளக்கைத் தேடி!

-நாமக்கல் சிபி

மீண்டும்



வார்த்தைகளற்ற
சூனியத்தின் நீட்சியில்
பிரக்ஞையற்று
மௌனத்தின் மீதேறிய
பயணத்தில்
பார்வைகளின்
விளிம்புகளை விட்டு
விலகிச் செல்லும்
ஊர்திகளாய்ப் போன
உள் மனதின்
ஊணர்வுகளோடு
ஒரு பொழுதேனும்
சண்டையிடத் திராணியற்று
திணறிக்கொண்டிருக்கிறேன்
நான்...!

கவிதையெல்லாம் ரத்தம்


சின்ன கரையெங்கும்
விஷம் தோய்ந்த கத்திகளோடு
நடமாடுகின்றன
காற்றின் பிணங்கள்
என் சிறு வயிற்றில் கீறலுடன்
கொலைததும்ப வழிகிறது குடல்
மதுபாட்டிலும் மறுகையில்
குறுவாளும் கொண்டு காற்றாடி
வழியே வானத்தை அளக்கிறேன்
எல்லா நிழல்களைப் போலவும்
என் பின்னேயும் தேய்ந்து மறைகிறது
ஒரு சின்ன ஒளிக்கீற்று
பின்னே முன்னே எந்த தடயமும் அற்ற
பெரிய கதவுகள் வழியே
தெறித்து தாவுகிறது உன் உயிர்
இன்னும் கொஞ்சம் காலம்
தேய்ந்திருக்க
எப்போது வருமென்று தெரியாமல்
என்னை பின்தொடர்ந்தே
வருகிறது
ரத்தம் தெறிக்கும் வரிகளுடன் ஒரு
கவிதை.

எங்கே எனது கவிதை ?


கற்பனையின் வறட்சியில்
மறைந்து போனது
எனது கவிதைகள் ?

எதை எழுதுவது ?

குறிக்கவிதைகள் எழுத
நான் கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் இல்லையே !

ஆத்திரம் தீர 'தீர்த்த' யாத்திரை செய்து
தினம் எழுத நான்
நாமக்கல்லார் இல்லையே !

கவிஜை எழுதி அதை கிண்டல்
அடிக்க நான் சாத்ததன் குளத்துக்காரர் இல்லையே !

காதல் கவிதை எழுதி
கலங்கடிக்க நான்
அருட்பெருங்கோ இல்லையே !

பாதிப்பில் படித்ததை
வடித்து வைக்க நான்
எஸ்கே ஐயா இல்லையே !

தேமா புளிமா அறிந்து
கட்ட(ட)ம் கட்டி எழுது நான்
இலவச கொத்தனார் இல்லையே !

'எழுச்சி' கவிதை எழுத
'குறி' சொற்களை தேட நான்
பொட்'டீ'க்கடை சத்தியா இல்லையே !

கற்பனை வறட்சியை தீர்க்க
எனக்கும் ஒரு மழைத்துளி
வேண்டி பருவ 'காலத்திற்காக' தவமிருந்தபடி
தற்போது நின்று கொண்டு இருக்கிறேன்
எங்கே எனது கவிதை ?

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

Feliz cumpleaños querido Kappi Paya


Feliz cumpleaños a mi Kappi!
Como las palabras deben
ser nuestro medio,
un poema, Quizás,
bien pueden mis deseos del
cumpleaños enviar,
Poemas que son retratos
internos hacia fuera en préstamo.
Con todo sería un paisaje
en las montañas, Sol brillante
que estropea un cielo vacío,
Caras inmensas de la
roca que contestan a
todas las preguntas,
Resolución de toda en qué
en vez de porqué.
Usted envío una esperanza
de la felicidad
Cercado con las
rosas que se erizan en
el viento, Hacer el deber
doble para su amante Como
centinelas contra los trucos
de la mente, Con todo
engañando bien el amor
que hace
clase de la vida.




என் ஞாபகப் பெருவெளியில்


குட்டையாய் இருந்த

சில குடைக்காளான்கள்

அடியில்

அட்டை போல் ஒட்டிக் கொண்டு

அதன் குருதி உறிஞ்சும் கோரப்

பற்களில் வடியும் ரத்த

நாளங்களின்

வன்ம வெடிப்பில்

காத்திருத்தலின்

கடைசி வினாடிகளை

புழுநெளியும் பச்சை

புல் வெளிகளின்

உள்ளே எனக்கானது எனச்

சொல்லும் ஏதாவது ஒரு

விஷமக் கணங்களை

அசைபோட்டபடி எல்லா

இரவுகளுக்கு உள்ளேயும்

ஒளிந்துகொண்டு

வன்மப்

பிரச்சாரம் செய்யும்

உனக்காகவும் இருக்கிறது

என் ஞாபகப் பெருவெளியில்

ஒரு சிறு இடம்.

கொலைவெறிக் காதல்


விரல் இடுக்குகளில்

ஒட்டியிருக்கும்

சிறு பருக்கைகளை

நாவால் நக்கியபடியே

காலாட்டிக்கொண்டு

தூங்குகிறது

ஒரு பெட்டை நாய்

இதழ்கள் ஓரம் கொடூரம்

சுமந்தபடி

பூணை ஒன்றின் திடீர்

வருகை உறக்கம் கலைக்க

மெல்ல எழுந்து சோம்பல்

முறிக்கிறது கால

இடைவெளிகள்

விளக்கணைத்ததும் வரும்

விட்டில் பூச்சிகளின்

விருப்பமான எண்ணெய்
தடவிய காகிதம் போல

உனக்கும் எனக்கும்

இன்னும் இருகிறது எதோ

பந்தம்

உன் நினைவுச் சுமைகளில்

என் காலடித்

தடம் பற்றி என்னை

துரத்துகிறது உன்

கொலைவெறிக்

காதல்

சந்திப்பு ஓவியப் போட்டிக்கு


முடிவற்ற
இப் பிரபஞ்சத்தின் ஒரே
முற்றுப் புள்ளி
பின் நவீனத்துவ
ஜல்லிகளுக்கும்
முன் நவீனத்துவ
கில்லிகளுக்கும்
இடையே
முடிவற்று நீள்கிறது
முன்னிருக்கும்
நிழல்
மண்டை
காயவைக்கும்
வெயில் மழையில்
விரைந்து வெளிப்படுகிறது
பறவையின் சிறகடிப்பு
எல்லாவற்றுக்கும்
மவுன சாட்சியாய்
ஒரே ஒரு சூரியன்