கவிதையெல்லாம் ரத்தம்


சின்ன கரையெங்கும்
விஷம் தோய்ந்த கத்திகளோடு
நடமாடுகின்றன
காற்றின் பிணங்கள்
என் சிறு வயிற்றில் கீறலுடன்
கொலைததும்ப வழிகிறது குடல்
மதுபாட்டிலும் மறுகையில்
குறுவாளும் கொண்டு காற்றாடி
வழியே வானத்தை அளக்கிறேன்
எல்லா நிழல்களைப் போலவும்
என் பின்னேயும் தேய்ந்து மறைகிறது
ஒரு சின்ன ஒளிக்கீற்று
பின்னே முன்னே எந்த தடயமும் அற்ற
பெரிய கதவுகள் வழியே
தெறித்து தாவுகிறது உன் உயிர்
இன்னும் கொஞ்சம் காலம்
தேய்ந்திருக்க
எப்போது வருமென்று தெரியாமல்
என்னை பின்தொடர்ந்தே
வருகிறது
ரத்தம் தெறிக்கும் வரிகளுடன் ஒரு
கவிதை.