#சாவுங்கடா!

மோதிக்கொள்ளப் போகும் 
இரண்டு கேஸ் டேங்கர்கள்
மேல் முட்டாமல் இருக்க
புளியமரத்தின் மேல்
மோதியது மூன்று சக்கர
ஆட்டோ....
டேங்கர் லாரிகள் இரண்டும் 
ஒதுங்கிச் செல்ல
முட்டிய ஆட்டோ முழுக்க
ரத்தம்...
டிரைவர் தவிர
எலோரும் மரணம்.
டிரைவர் ஆன் தி வே!!

#சாவுங்கடா


முன்பெல்லாம் அரசாங்கம்
பணம் கொடுத்து
அரிசி, ஹார்லிக்ஸ்
எல்லாம் கொடுத்துதான் 
குடும்பக் கட்டுப்பாடு
செய்துகொண்டிருந்தது 
இப்போதெல்லாம்
குடி மக்களே முன்வந்து
செய்துகொள்கிறார்கள்.
டாஸ்மாக்கில்.

#சாவுங்கடா


மேலிருந்து கீழாகவும்
கீழிருந்து மேலாகவும்
கயிற்றின் முனைகளை
பற்றிக் கொண்டே
கடந்து கொண்டிருக்கிறது
காலம்,
கிடைக்கப் போவது
கழுத்தாகவும் இருக்கலாம்
இப்படி ஏதாவது
மொக்கை
கவிதையாகவும்
இருக்கலாம்.

#சாவுங்கடா

தூக்கு தூக்கி

அவன்
கீழே போய்க்கொண்டிருந்தான்
அவள்
மேலே போய்க்கொண்டிருந்தாள்
லிஃப்ட் இயக்குனர்.
இரண்டு பேரையும்
தன் சிசி மானிட்டரில்
வெறித்துப் பார்த்தபடி
சுவிட்சை ஆஃப்செய்தான்
சாவுங்கடா என்ற
உலகுபுகழ் ஹேஷ் #டேகை
தன் கவிதையின்
கடைசி வரியாய்
எழுதிக் கொண்டே

#சாவுங்கடா