அரோகரா....

பனிரெண்டாவது பியில்
ஏறி புரட்சி வரப்போகிறது
என்றும் அது
தனக்கு ஏற்கனவேயுள்ள
தடைகளை தகர்த்து
வெகு வேகமாய் முன்னேற்றம்
கண்டுகொண்டிருக்கிறது என்றும்
சாலையோர பூங்காவில்
எப்போதோ சந்தித்து
விடைபெறாமல்
போன நண்பர்
குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
புரட்சி ஒன்றும் சொல்லிவிட்டு
வருவதற்கு அத்தை மகளோ
மாமன் மகளோ
இல்லை அடுத்த வீட்டு
சூப்பர் ஃபிகரோ இல்லையே
தோழர் என்ற என் கேள்வியை
நண்பர் வாங்கித் தரப்போகும்
ஒற்றை தேநீர், வடை நிமித்தம்
பொறுத்துக்கொள்ள வேண்டிய
அளவில்,
என் எப்போதும் முன் உள்ள
தந்திரமாக ஒளிந்து தப்பித்தல் வித்தைகளை பயன்படுத்தி
சமாளித்துவிட்டேன்.
நண்பர் ஒன்றும் அப்படி
வடை சாப்பிடும் ஆள்
இல்லைதான் .
எனக்கு முன் ஏகப்பட்ட வேலைகள்
காத்துக் கிடக்கும் வேளையில்
தமிழ் தேசியம்,
முப்பாட்டன் முருகன்,
திருவிளையாடல்
படம் பற்றியெல்லாம்
கேட்டுத் தொலைக்க வேண்டி
இருக்குமே.....
ம்ம்ம்ம்ம்ம்
வெற்றிவேல்
வீரவேல்
என்ற வெற்று முழக்கம்
சொல்லி பச்சை ஆடையில்
பவனி வரவேண்டிய காலம்
என்ன ஹிந்து முன்னணிக்கு
மட்டுமே உரித்தானதா
என்ன?
நாளைக்கே நான்
2016ல்
பாயும்போது நீங்களும் சொல்லக்கூடிய ஆள்தான்
காக்க காக்க
வாரணம் ஆயிரம்
ச்சே......
சக்தியை நோக்க சரவண பவணார் ....
அதுவும் இல்லையா?
வெற்றி வேல் வீர வேல்...

0 comments: