எல்லோரும் நிறுத்திய பிறகு


என் கவிதை வரிகளை

படித்து எச்சம் என்ற

சொல்லுக்கும்

மிச்சம் வைக்காமல்

எனை நிறுத்தச் சொல்லும்

சிங்கை கவுஜருக்கு..

என்ன எழுதினோம்

என்ன எழுதுகிறோம்

என்பதே தெரியாமல்

இருந்தால் தான் முற்று

புள்ளியற்ற முதல் கவுஜை

என வாய்க்கு வந்ததை எல்லாம்

வா.....ஆஆஆஅ

போ.....ஓஓஓஓஒ

என வரிக்கு

வரி நீட்டியும்

குட்டை பாவாடை

பொண்ணை

பார்த்து

மதுபோதை

தலைக்கேறியதையும்

குனிந்து குப்பை கூட்டியதால்

மனசு குப்பையானதாக

கவுஜை புணையும்

மகாகவுஜர்களையும்

அவர்கள் எழுதும் காவிய

கவுஜைகளையும்,

ஏ தமிழனே உன் ரத்த

பந்த தொப்புள்கொடி

ஈழத்தில் கிடக்கிறது

கேள்வியற்று என்பவனையும்,

அவள் திரும்பிச்

சிரித்தாள்

சரிந்தேன்

திரும்பவும் சிரித்தாள்

என காதல் காவியங்களையும்

அடித்து துவைத்து

காயப்போடும்

வரை

என் கவுஜை நிற்காது

அது எப்போது நிற்கும் என

"காலத்துக்கே' தெரியாதபோது

என்னை கேட்பது

எந்த விதத்தில்

நியாயம்?

2 comments:

said...

இந்த கொலைவெறிக்கவுஜயை எழுதிய கரங்களுக்கு #$%#$%%

said...

//என்னை கேட்பது
எந்த விதத்தில்
நியாயம்?
//

அதானே! எந்த விதத்தில் நியாயம்?