கொலைவெறிக் காதல்


விரல் இடுக்குகளில்

ஒட்டியிருக்கும்

சிறு பருக்கைகளை

நாவால் நக்கியபடியே

காலாட்டிக்கொண்டு

தூங்குகிறது

ஒரு பெட்டை நாய்

இதழ்கள் ஓரம் கொடூரம்

சுமந்தபடி

பூணை ஒன்றின் திடீர்

வருகை உறக்கம் கலைக்க

மெல்ல எழுந்து சோம்பல்

முறிக்கிறது கால

இடைவெளிகள்

விளக்கணைத்ததும் வரும்

விட்டில் பூச்சிகளின்

விருப்பமான எண்ணெய்
தடவிய காகிதம் போல

உனக்கும் எனக்கும்

இன்னும் இருகிறது எதோ

பந்தம்

உன் நினைவுச் சுமைகளில்

என் காலடித்

தடம் பற்றி என்னை

துரத்துகிறது உன்

கொலைவெறிக்

காதல்

12 comments:

said...

காதல் பட கிளைமாக்ஸ் மாதிரி ஆக்கிடுச்சே இந்தக் கவிதை!

said...

:)

ஆஃப் லைன் அனானி said...

ஆன் லைன்ல தான் இருக்கீறா?

said...

Interesting! Good!!

said...

எப்படி ஐயா இப்படி எல்லாம் ;-(((

said...

அருமையான கொலவெறி! சூப்பர்!!

முருகன் said...

//காதல் பட கிளைமாக்ஸ் மாதிரி ஆக்கிடுச்சே இந்தக் கவிதை! //

கல்லாலயே அடிப்பாய்ங்களோ?

ஐஸு சந்தியா said...

//எப்படி ஐயா இப்படி எல்லாம் ;-((( //

ஏ புள்ள இங்க பாரேன் ஒரு கண்ணாடிக் காரு எப்படின்னு கேள்வி க்கேக்குறாரு !! என்னைய காதலிச்சா பின்ன என்ன ஆகும்?

ஃபாலோ ஆன் அனானி said...

//அருமையான கொலவெறி! சூப்பர்!! //

வழக்கம் போலவே படிக்கலியா?

கவிப்புள்ள said...

//Interesting! Good!! //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எப்படி நன்றிசொல்றது?

Anonymous said...

கவிதை நன்றாகத்தானே இருக்கிறது, பின்ன ஏன் கவுஜை லிஸ்ட்ல சேர்த்துட்டீங்க? சரியான மனநிலைல படிக்காம விட்டுருப்பீங்கன்னு நம்புறேன். இல்லைன்னா உங்க ஸ்டாண்டார்ட் ரொம்ப அதிகம். :)

said...

//தூங்குகிறது
ஒரு பெட்டை நாய்
இதழ்கள் ஓரம் கொடூரம்
சுமந்தபடி
பூணை ஒன்றின் //

கிழமத்தூர் அய்யா,
என்னங்க நீங்க,இப்படி எழுதிட்டீங்க?மஞ்ச துண்டு அய்யாவை பெட்டை நாயாவும்,மரம் வெட்டியை கடுவன் பூனையாவும் உருவகப்படுத்திட்டீங்களே?என்ன கொலைவெறி காதலோ போங்க.

பாலா