கோவணங்களால் ஆனது என் வேட்டி


ஒரு காலத்தில்
என் பாட்டனும் பூட்டனும்
கோவணங்களை வேட்டிகளைக்
கொண்டே தயார் செய்துகொண்டனர்
புதுக் கோவணம் என்ற சொற்ப் பதமே
அப்போது இருந்திருக்காது
இப்போது போல
அப்போது ஜாக்கியோ
கால்வினோ இல்லை
இருந்ததெல்லாம் பழைய நைந்து போன
வேட்டி மட்டுமே
அதுவும் அந்த வேட்டி இனிமேல்
கோவனத்துக்கு மட்டுமே
ஆகும் என்ற காலமான
காலம்
இப்போது லுங்கியும்
வேட்டியும் அணிபவனைக்
கண்டால் ஏளனமாய் பார்க்கும்
எல்லோரின் முன்னோர்களும்
ஒரு காலத்தில் அந்த கிழிந்த வேட்டியையே
கோவனமாக
அணிந்த உண்மையை நாம்
உரக்கச் சொல்வோம்.