வெடிப்பெடுக்கும் தனிமை


ஊறிக்கிடக்கும்

உடல் வெப்பம்

நாள்முழுக்க

போதையேற்றி

தினம் ஒரு பாட்டில்

தைலம் குடிப்பதுபோல்

தலையை வலிக்கிறது.


குருவிகளின்

கூப்பாடு கேட்டு

குயில்களின் சுயம்

விழித்துக்

கொள்கின்றன.

தன் உச்சந்தலை

கூந்தல் முடியை

உலரவைத்த படியே

மிதந்து செல்கிறது

ஒரு சிறு பறவையின்

இறகுச் சத்தம்

காற்றில்

கரைந்திருக்கும்

தனிமை.

எப்படியாவது உன்

இருப்பை

தெரிவித்து விடுகிறது

1 comments:

said...

//காற்றில்
கரைந்திருக்கும்
தனிமை.
எப்படியாவது உன்
இருப்பை
தெரிவித்து விடுகிறது//

கொலைவெறிக்கவுஜயா இருந்தாலும் உங்கள அறியாமலே நல்ல விஷயமும் சொல்லிருக்கீங்க! பாராட்டுக்கள்.. :)

(யாருப்பா அங்க..? இந்த மகேந்திரனை கட்சிய விட்டு தூக்குங்க. கட்சி விதமுறைகளை மீறி புரியறாப்பல எழுதி தொலைக்கிறாரு!)