ஆ..ஆ..வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!


பெருநிலத் தச்சன்

செதுக்கிய ஆழி

மிச்சத்தில் ;

அமிழ்ந்த படியே

வெளியேற மறுக்கிறது

என் சுயம்

தேடிய வடுக்கள்,

அறுத்து வீசிய

ரத்த நாளங்கள்

வழியே

குருதிப் புனலென

பீறிட்டு வருகிறது

என்மேலான

உன் கோபம்,

காகித குப்பைகளை

பொறுக்கியபடியே

கடந்து

செல்கிறது

என்னை பின்

தொடர்ந்து

வரும் உன் நிழல்,

உனக்கும் எனக்கும்

இருக்கும்

இடைவெளியை

இன்னும்

அதிகமாக்கியவாறே

எங்கோ சிறகொடிந்து

கிடக்கிறது

நான் உனக்கனுப்பிய

முகவரியில்லா

கடிதம்

2 comments:

said...

நோ கமெண்ட்ஸ் யெட்?

said...

முகவரியே இல்லாத கடிதமெல்லாம் அப்படிதான் போகும்.